பாடகி : சுசீலா
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
பெண் : லாலாலா லாலாலா லாலாலா ஹோய்…
லாலால லாலாலா
விழியெங்கும் ஆடுது இளமை
வழியொன்று தேடுது இதயம்
மாறாத பருவங்களே ஓயாத விழி கங்கையே
பெண் : சோகங்கள்…..தீரும் காலங்கள்
பாதங்கள்……பேசும் கீதங்கள்……
குழு : ……………………………….
பெண் : நானாடும் ஆடல் கலையே
ஏனிங்கு மாறும் நிலையே
ஒரு காலம் வாழ்ந்தேன் தனியே
இலை மேலே பனியின் துளி போல்
பெண் : விலை தந்து மோகத்தில் தள்ளாட
விடிகின்ற நேரம் கண் மூட…
விலை தந்து மோகத்தில் தள்ளாட
விடிகின்ற நேரம் கண் மூட…
பெண் : சோகங்கள்…..தீரும் காலங்கள்
பாதங்கள்……பேசும் கீதங்கள்……
பெண் : விழியெங்கும் ஆடுது இளமை
வழியொன்று தேடுது இதயம்
மாறாத பருவங்களே…….
ஓயாத விழி கங்கையே…..யே யே யே……
பெண் : விட்டில் நான் விழுங்குவது சுடரோ…..
குழு : ……………………..
பெண் : நாள்தோறும் பார்வை கணையால்
ஒரு கோடி மோக மலராய்
இருள் மீது வாழ்ந்தேன் சிலையாய்
எழுதாத பாடல் வரி போல்
பெண் : அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ
இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ
அலை வந்து நெஞ்சத்தில் துள்ளாதோ
இளமங்கை எண்ணங்கள் வெல்லாதோ
பெண் : சோகங்கள்…..தீரும் காலங்கள்
பாதங்கள்……பேசும் கீதங்கள்……
பெண் : விழியெங்கும் ஆடுது இளமை
வழியொன்று தேடுது இதயம்
மாறாத பருவங்களே…….
ஓயாத விழி கங்கையே…..யே யே யே……
பெண் : வீணை நான் மீட்டுவது விதியோ…..