பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்
ஆண் : யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு
சுகம் இழப்பார் என்ற வாகார்ந்த் வள்ளுவன்
வரம்பை உணராது சாகாமல் சாகதீர் தாரணியோரே
ஆண் : வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
ஆண் மற்றும் குழு :
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
ஆண் : தெள்ளுதமிழ் ஏட்டில் உள்ள பாட்டினிலே
அவ்வை பாட்டினிலே கண்டு நாம்
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே
ஆண் மற்றும் குழு :
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே
ஆண் மற்றும் குழு :
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
ஆண் : யோசனை இல்லாமல் பேசாதே முன்பின்
யோசனை இல்லாமல் பேசாதே நீ
உன்னை மறந்தே உலகை ஏசாதே
நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே
ஆசையினால் சினம் அடையாதே
ஆசையினால் சினம் அடையாதே
பகுத்தறிவையும் இழந்து உளறாதே
ஆண் மற்றும் குழு :
பகுத்தறிவையும் இழந்து உளறாதே
ஆண் மற்றும் குழு :
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது