பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நேத்து பேஞ்ச மழையிலே
இன்னைக்கி முளைச்ச காளான்
என்னை பார்த்து
ஒரு கேள்வி கேட்டாளே
ஆண் : நான் வளர்த்த செடியிலே
மூணு இலை துளிர்க்கல
என்னை பார்த்து
ஒரு பாட்டு சொன்னாளே
ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா
ஆண் : பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
ஆண் : ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து……
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
ஆண் : தாவணி போட்ட என் தங்கச்சிக்கு
சேலையை உடுத்திவிட்டேன்
லாவணி பாடி என் தங்கத்துக்கு
தங்க காப்பையும் போட்டுவிட்டேன்
ஆண் : அந்த கையாலே என்னை அடிச்சாலும்
எதும் ஒரைக்காது அது வலிக்காது
ஒரு சொல்லாலே என்னை அடிச்சாளே
வடு மாறாது அது மறையாது
பாசம் நேசம் வேஷம் வேஷம்
பாடம் கிடச்சாச்சு
பந்தங்கள் போயாச்சு
ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா
ஆண் : பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
ஆண் : ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து……
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஆ….ஆஅ….ஆஅ…ஆஅ….
ஆஆ….ஆஅ….ஆஅ…ஆஅ….
ஆண் : போனால் போகட்டும் போடா என்று
பாட நான் ஒரு கவிஞன் இல்லை
ரகுபதி ராகவ ராஜாராம் பாட
நான் ஒரு காந்தியும் இல்லை…
ஆண் : என் கட்சிதான்
அன்று ஆட்சியில்லை
இப்ப எதிர்கட்சி
நான் எங்க வீட்டினிலே
என் கட்சியில் இன்று யாருமில்லே
ஆண் : அந்த தங்கச்சியின்
பக்கம் நியாயமில்லே
குடும்பம் இங்கே கட்சியாச்சு
நடக்கும் ராஜாங்கம்
நலமாக வாழட்டும்
ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா
ஆண் : பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
ஆண் : ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா