பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : சிந்தையில் வைத்த
அண்ணன்தான்
பந்தலில் நிக்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : யாருக்கு என்ன தீங்கு செய்தேன்
ஏன் இந்த சோதனை
தங்கச்சிக்குதான் தெரியும்
அண்ணனின் வேதனை
ஆண் : சொந்தங்கள் எல்லாம் போயாச்சு
சொப்பனம் போலே ஆயாச்சு
பந்தங்கள் எல்லாம் என்னாச்சு
பட்டது போதும் என்றாச்சு
ஆண் : {மங்கள வாத்தியங்கள்
ஊருக்குள் முழங்குது
இங்கிருந்து என் மனம்
வாழ்த்துக்கள் வழங்குது} (2)
ஆண் : அண்ணன் இங்கே தேடுமோ
கண்ணீரிலே ஆடுமோ
அந்நாளிலே நான் வளர்த்த
வண்ணக்கிளி வாடுமோ
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா….ஆ…..
ஆண் : நேசம் வெச்ச பாவத்துக்கு
நெஞ்சமே அனுபவி
நீரை விட்டு அழிச்சாலும்
நீங்குமா தலை விதி
ஆண் : என் விதி இப்போ என்னோடு
யாரிடம் சொல்ல என் பாடு
கற்பனை செய்து கண்ணோடு
கட்டியதெல்லாம் மண் வீடு
ஆண் : {ஊருக்கே பாடம் சொல்லும்
வாத்தியார் வீட்டு பிள்ளை
வாழ்க்கை என்னும் பாடத்தைத்தான்
சரிவர படிக்கவில்லை} (2)
ஆண் : நேரம் ஒன்று உண்டாகும்
எல்லாம் அன்று நன்றாகும்
ஒண்ணாகத்தான் நாம் இருக்க
பின்னால் ஒரு நாள் வரும்
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா
ஆண் : சிந்தையில் வைத்த
அண்ணன்தான்
பந்தலில் நிக்க கூடாதா
அண்ணனும் அங்கே வந்து நின்று
அட்சதை போட கூடாதா
ஆண் : அண்ணன விட்டு
ஒரு கல்யாணமா
அன்பு கண்களை கட்டி
ஒரு ஊர்கோலமா