பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்
பெண் : வந்தேனே சின்ன சிட்டு வயசு ஏங்குது
நான் தந்தேனே வெட்கம் விட்டு ஆசப் பொங்குது
முன்னாடி வந்தாடத்தான் மூச்சு வாங்குது
நீ முன்னூறு முத்தம் தர
இரவு முழுதும் பனியில் நனைய
சுகமே வருமே தினமே கன்னி மனசுல நீ
வந்தாடு கண்ணோடு என்னோடு
பெண் : ஏய்…வந்தேனே சின்ன சிட்டு வயசு ஏங்குது
நான் தந்தேனே வெட்கம் விட்டு ஆசப் பொங்குது
முன்னாடி வந்தாடத்தான் மூச்சு வாங்குது
நீ முன்னூறு முத்தம் தர
இரவு முழுதும் பனியில் நனைய
சுகமே வருமே தினமே கன்னி மனசுல நீ
வந்தாடு கண்ணோடு என்னோடு ஹேய் ஹேய்
பெண் : ……………………………..
பெண் : நித்தம் ஒரு பாடம் சொல்லு
முல்லை என்னை சூடிக் கொள்ளு
புத்தம் புது பூவையள்ளு
நித்திரையில் சேர்த்துக் கொள்ளு
என்னயள்ளு ராஜா நான் சிங்கார ரோஜா
கன்னம் கிள்ளு லேசா தேனூறும் பாதுஷா
இதமா பதமா சுகமா உறவாட நீ
கதவு திறக்கும் நேரம் இந்த வயசல்லவா
என்னோடு வந்தாடு பந்தாடு…
பெண் : வண்ண மயில் வாசல் வந்து
வாரி வாரி பொன்னை சிந்து
அத்தை மகள் நானும் இங்கு
வித்தைகளில் நீயும் பங்கு
பத்து விரல் சேர பஞ்சணையில் கூட
அக்கம் பக்கம் பாரு என்னோடு சேரு
இதமா பதமா சுகமா உறவாட நீ
சுகமாய் கூடும் வேகம் அந்த நிலையிலே
ஆஹ் எப்போதும் இன்பம்தான் சொர்க்கம்தான்
பெண் : வந்தேனே சின்ன சிட்டு வயசு ஏங்குது
நான் தந்தேனே வெட்கம் விட்டு ஆசப் பொங்குது
முன்னாடி வந்தாடத்தான் மூச்சு வாங்குது
நீ முன்னூறு முத்தம் தர
இரவு முழுதும் பனியில் நனைய
சுகமே வருமே தினமே கன்னி மனசுல நீ
வந்தாடு கண்ணோடு என்னோடு