பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, கே. ஜமுனாராணி,
சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் அஞ்சலி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
விசில் : …………………………………
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ ஓஒ
பெண் : வந்த நாள் முதல்
இந்த நாள் வரை
யாரும் மாறவில்லை
இந்த வார்டரும்
போர்டும் கம்பவுண்டரும்
டாக்டரும் நர்சும் வாச் மேன்களும்
யாவரும் மாறி விட்டார்
நாங்கள் மாறவில்லை
ஒரு நாளும் தேறவில்லை
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ ஹொயி…
பெண் : நாட்டுக்குள்ளே திருவிழா
நமக்கது திருவிழா
நல்ல நல்ல கொலுகள் வைக்கும்
நவ ராத்திரி திருவிழா ஹோய்
பெண் : நாட்டுக்குள்ளே திருவிழா
நமக்கது திருவிழா
நல்ல நல்ல கொலுகள் வைக்கும்
நவ ராத்திரி திருவிழா ஹோய்
ஓஹோ ஹோய்…….
பெண் : ஜவ்வாது பொட்டு வச்சி…
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ….
சர்க்கரையில் பொங்லிட்டு…
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா…
பெண் : ஜவ்வாது பொட்டு வச்சி
சர்க்கரையில் பொங்லிட்டு
செவ்வாழை இலை எடுத்து மாமா வா
சிந்தாமல் சிதறாமல் தா தா தா
பெண் : ஏமாறச் சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
பெண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்
பெண் : முத்துப் போல் பல்லழகி…
முன் கோபச் சொல்லழகி
கத்தி போல் கண்ணழகி…
பணிவான பெண்ணழகி… ஈ…ஈ….
பெண் : வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
ஏங்க மச்சி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
ஏங்க மச்சி நீங்க
ஏன் இப்படி பாக்குறீங்க
பெண் : வாங்க மச்சி…
சும்மா வாங்க மச்சி…
கிட்ட வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
குழு : வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
வாங்க மச்சி வாங்க
எங்க கொலுவ பாக்க வாங்க
பெண் : {ஒன்னும் ஒன்னும் மூனு
ரெண்டும் ரெண்டும் அஞ்சு
மூனும் மூனும் எட்டு
எட்டும் நாலும் பத்து
ஒன்னும் ஒன்னும் மூனு
ரெண்டும் ரெண்டும் அஞ்சு
மூனும் மூனும் எட்டு
எட்டும் நாலும் பத்து ஒன்னு……} (2)