வடிவேலும் மயிலும் துணை...
வடிவேலும் மயிலும் துணை
சொல் வளமார் செந் தமிழால்
சந் ததமும்கந் தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை...
நடராஜன் அருள் பாலன்
நான் மறை தொழும் சீலன்
நடராஜன் அருள் பாலன்
நான் மறை தொழும் சீலன்
தடம் மேவும் பொழில் சூழும்
தணிகை வாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை...
சொல் வளமார் செந் தமிழால்
சந் ததமும்கந் தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை...
தமிழ் மாலை தனைச் சூடுவான்
தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன் சந்தத்
தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்
தாப மிகு வெப்பு வாதமொடு
பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
தாப மிகு வெப்பு வாதமொடு
பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளை யளித்திட வேணு மெனத்துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உதைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை
ஜப மாலையுடன் சந்தத்
தமிழ் மாலை தனைச் சூடுவான்
சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
துவர் கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே...