பாடகர்கள் : ஷக்தி ஸ்ரீ மற்றும் லெபோ எம்
இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர்
ஆண் : ……………………………………
ஆண் : இந்த பூமிப் பந்தில்
நாம் பிறந்தோம்
கண் கூச அவ்விண்ணைக் கண்டோம்
ஆண் : அந்நாள் முதல்
இந்த நொடி வரை
வியப்பில் உலகைப் பார்க்கிறோம்…..
ஆண் : கண்ட காட்சிகள்
அலை என்றே
காணா இன்பங்கள் கடல்
வெள்ளி வான்வெளியும்
அந்தச் சூரியனும்
சொல்கின்றன எல்லாம் ஒன்றே….
ஆண் : வாழ்க்கையே வட்டமாய்
அதன் மீது நாம்
ஒரு நாள் வீழ்வோம்
ஒரு நாள் மீள்வோம்
நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம்
இந்த வாழ்க்கை…
வாழ்க்கையே வட்டமாய்
ஆண் : வாழ்க்கையே வட்டமாய்
அதன் மீது நாம்
ஒரு நாள் வீழ்வோம்
ஒரு நாள் மீள்வோம்
நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம்
இந்த வாழ்க்கை…
வாழ்க்கையே வட்டமாய்