பாடகர்கள் : ஹரிப்பிரியா மற்றும் ராமு
இசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர்
பெண் : நான் ராஜா ஆகப்போறனே
என் எதிரிங்க யார்?……
ஆண் : ஹே ஹே இவன் ராஜானா
யாரு நம்புவா
இவன் வாய பூட்ட போறேன்
பெண் : என் போல ராஜா கிடைச்சுட்டா
உனக்கில்ல பிரச்சனை
கம்பீரமா என் தோரணை
கேள் என் கர்ஜனை
ஆண் : ஹாஹூ இப்போ வரை நீ
ஒண்ணுமில்லா கூஜா
பெண் : கொஞ்ச நாளில் நான்தான் ராஜா……
ஆண் : உன் கற்பனை எல்லாம்
நல்லாத்தான் இருக்கு
ஆனா அதுக்கு முன்னாடி
பெண் : யார் சொல்வா இதச் செய்
ஆண் : நில்லு… நான் என்ன சொல்றேனா
பெண் : யார் சொல்லுவா நில்லு
ஆண் : சொல்றத கேக்க மாட்டியா?…..
பெண் : யார் சொல்லுவா நிறுத்து
யாரு சொல்லுவா பாக்க……ஆஅ……
ஆண் : இங்க பாருன்னு சொல்றேன்ல
பெண் : கட்டளைகள் உதவாதே
ஆண் : ஹான் அது கண்டிப்பா முடியாது
பெண் : கட்டிப்போட கூடாதே
ஆண் : உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்
கொஞ்சம் நேரம் கிடைக்குமா?
பெண் : இருவாயன் சொல்லும் அறிவுரை
என் காதில் கேக்குமா?
ஆண் : இது போலதான் உன் ஆட்சி இருக்கும்னா
நான் அதில இல்ல
ராஜினாமா இந்தா
நாட்ட விட்டுப் போறேன்
திரும்ப இங்க வரவேமாட்டேன்…
ஆண் : இவன் வாயோ ரொம்ப நீளம் ஆச்சே
சிம்பா
பெண் : கொஞ்ச நாளில் நான்தான் உன் ராஜா
பெண் : இடப்பக்கம் பாரு
வலப்பக்கம் பாரு
என்னப் போல ஊரில்
யாரிருக்கா கூறு?
ஆண் : யாரும் இல்ல
குழு : ஓ நெஞ்சில் எல்லாம்
இன்பம் வந்தாச்சா
ஓ மிருகம் பறவை
ஒண்ணா சேர்ந்தாச்சா
சிம்பாவினால் இங்கு
பூக்குமே ரோஜா
பெண் : கொஞ்ச நாளில் நான்தான் ராஜா
பெண் : கொஞ்ச நாளில் நீதான் ராஜா
பெண் : கொஞ்ச நாளில் நான்
அனைவரும் : நீதான் ராஜா