பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
ஆண் : ஹேய் லால லால்லா….ஆ…..
பெண் : ஹேய் ராஜா ராஜா….ஆ….
ஆண் : லால லால்லா….ஆஹா ஹா
பெண் : ராஜா ராஜா….ரா….ரா…..ஆ…..
ஆண் : ……………………….
பெண் : ………………………
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா
அட வா வா வா ரோஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
பெண் : வா வா வா ராஜா தா தா தா
அட வா வா வா ராஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை….
ஆண் : ஆசை நெஞ்சுக்குள்ளே ஹேஹே
பல ஜாடை கண்ணுக்குள்ளே
பெண் : மேகம் விண்ணுக்குள்ளே ஆஹான்
ஒரு நாணம் பெண்ணுக்குள்ளே
ஆண் : இளமை தேனாற்றில் நீராடலாம்
பெண் : இனிமை தேரேறி நின்றாடலாம்
ஆண் : மோகம் ஒன்று வேகம் கொண்டு
நெஞ்சில் பந்தாடுதே தகதிமிதகிடதகிட….
பெண் : உள்ளம் ரெண்டு அன்பில் நின்று
ஊஞ்சல் கொண்டாடுதே தகதிமிதகிடதகிட….
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா
பெண் : பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
பெண் : கன்னம் செண்டாகட்டும் ஹேய் ஹேய்
உன் இதழ்கள் வண்டாகட்டும்
ஆண் : சொர்க்கம் உண்டாகட்டும் ஆ……ஆஹ்
அதில் சொந்தம் நின்றாடட்டும்
பெண் : பருவம்…..ஆ…..ஆஹ்….
கல்யாண நாள் பார்க்கட்டும்
ஆண் : உருவம்……ம்ம்…..ம்ம்….ம்ம்….
ஒன்றோடு ஒன்றாகட்டும்
பெண் : கண்கள் சொல்ல உள்ளம் துள்ள
வெள்ளம் பாய்ந்தோடட்டும் தகதிமிதகிடதகிட….
ஆண் : வெள்ளம் தன்னில் இன்பம் என்னும்
மீன்கள் சாய்ந்தாடட்டும் தகதிமிதகிடதகிட….
பெண் : வா வா வா ராஜா தா தா தா
ஆண் : பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை….
பெண் : வா வா வா ராஜா தா தா தா
ஆண் : வா வா வா ரோஜா தா தா தா