பாடகர்கள் : கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் அலிஷா தாமஸ்
இசையமைப்பாளர் : தரன் குமார்
ஆண் : ஒரு நொடியினில் நாம்
நிலை தவறியதால்
நெடுநாள் வாழ்வே
இருளாய் மாற
ஆண் : நினைவுகள் மொத்தம் நீயாக
மனம் நிரம்பியதே
மெதுவாய் மெதுவாய்
வழி பெருகியதே
ஆண் : உனக்குள்ளே அடி நான் இன்று
காதல் கொள்ள
அதன் பொருள் இன்று மெய்யானதே…….
என்னை விட்டு வெகுதூரம்
தனியாக நீ செல்ல
அடியே ஒரு நொடியே எனை கொல்கிறதே….
ஆண் : உயிரே வா காத்திருந்தேன்
உனையே நான் எதிர் பாத்திருந்தேன்
உயிரே வா காத்திருப்பேன்
இருப்பேன் இருப்பேன்
உரச உரச நினைவு உரச
பெண் : ஒரு நொடியினில் நாம்
நிலை தவறியதால்
நெடுநாள் வாழ்வே
இருளாய் மாற
ஆண் : சரியோ தவறோ
வேற வழி இல்ல
ஆன இதுவோ இல்ல முடிவு
எனக்கு தெரியும் சரியா தவறா
நான் உன்ன கேக்கல நீ சொல்லுவா
ஒரு உடலாய் நீயும் நானும்
இரு உயிராய் இணைந்தோம்னு
சொல்லுவன்னு தெரியும்
பெண் : நடந்தேன் கலைந்தேன்
தொலைந்தேன்
நம் நினைவில் தவித்தேன் சிதைத்தேன்
காதலை என்னுள் சுமந்தேன்
என்னை நினைத்தேன்
உன்னை நினைத்தேன்
என்னுள் உன்னை நிறைத்தேன்
ஆண் : ஹ்ம்ம் சரியோ தவறா
வழி வேற் இல்லையே
இதுவும் இல்லை முடிவே
பெண் : சரியா தவறா
உன்னை கேட்கலையே
ஒரு உடலாய் இங்கு நானும்
இரு உயிராய் இணைந்தேன்
பெண் : உயிரே வா காத்திருந்தேன்
உனையே நான் எதிர் பாத்திருந்தேன்
இருவர் : உயிரே……வா காத்திருப்பேன்
இருப்பேன் இருப்பேன்
உரச உரச நினைவு உரச
பெண் : ஒரு நொடியினில் நாம்
நிலை தவறியதால்
நெடுநாள் வாழ்வே
இருளாய் மாற……இருளாய் மாற……
ஆண் : நினைவுகள் மொத்தம் நீயாக
மனம் நிரம்பியதே
மனம் நிரம்பியதே
மெதுவாய் மெதுவாய்
வழி பெருகியதே
ஆண் : உனக்குள்ளே அடி நான் இன்று
காதல் கொள்ள
அதன் பொருள் இன்று மெய்யானதே……
என்னை விட்டு வெகுதூரம்
தனியாக நீ செல்ல
அடியே ஒரு நொடியும் எனை கொல்கிறதே…..
ஆண் : உயிரே வா காத்திருந்தேன்
உனையே நான் எதிர் பாத்திருந்தேன்
இருவர் : உயிரே வா காத்திருப்பேன்
ஆஅ……ஆஅ……நனனா……
உரச உரச நினைவு உரச