உச்சியில உதிச்சவனே எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சு காத்தவனே பொன் முடிச்சு போட்டவனே
தொத்து நோயா தெரிஞ்ச வித்தை வித்தையெல்லாம் நீ புரிஞ்ச
சுத்தமாக எங்க தேசம் நித்தமெல்லாம் பூத்திருக்கு
சிந்தனை எல்லாம் உம் பெருமை பேசி சிறக்க வச்சோம்
சந்தனம் சவ்வாது பூசி சந்நிதிய மணக்க வச்சோம்
எங்க வாழ்க்கை கெட்டியாக கொட்டி கொட்டி கொடுக்கும்
நீயா உன்ன கும்பிட்டு கொண்டாடும் இந்த முண்டாசுப்பட்டி
உனக்கு முண்டாசு கட்டி உச்சியில
உச்சியில உதிச்சவனே எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சு காத்தவனே பொன் முடிச்சு போட்டவனே
வானமுனி வானமுனி நீ வந்த பின்னே ஏது பிணி
வானமுனி வானமுனி நீ வந்த பின்னே ஏது பிணி
அண்டம் அதிர ஜக ஜக ஜக எங்க அங்கம் குளிர ஜக ஜக ஜக
வந்திறங்கி வச்சவன் நீ. மாரி மழை பெய்ய வச்ச மனசு
வயிறு நிறைய வச்ச கோடி வருஷம் நீ இருந்து எங்க குலவிளக்க
யேத்திடனும்
உச்சியில உதிச்சவனே எங்க மத்தியில குதிச்சவனே
கண் முழிச்சு காத்தவனே பொன் முடிச்சு போட்டவனே