பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…
ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…
ஆண் : மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் உன்னை சேர்த்து…
ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…
ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…
பெண் : …………………………
ஆண் : இதுவரை உனை நானும்…
பெண் : ஆ..ஆ…
ஆண் : இளயவன் எனை நீயும்…
பெண் : ஆ..ஆ…
ஆண் : காணாமல் கூடாமல்…
எங்கேயோ வாழ்ந்தோம்…
பெண் : முதன் முதல் முகம் பார்த்து…
முழுவதும் உடல் வேர்த்து…
நீராட போராட…
இந்நாளில் சேர்ந்தோம்…
ஆண் : கல்யாணம்…கச்சேரி…
கண்ணார எந்நாளில் காணலாம்…
பெண் : பொன்னூஞ்சல்…பூப்பந்தல்…
வைபோகம் தை மாதம் மாலையிடு…
ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…
ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…
குழு : ………………………..
பெண் : இரவுகள் எனை வாட்டும்…
இடையினில் அனல் மூட்டும்…
நீ இன்றி நான் இங்கு…
பாய் போடும் மாது…
ஆண் : பிரிவுகள் இனி ஏது…
பிறவியில் கிடையாது…
நீ தானே நான் வந்து…
பூச்சூடும் மாது…
பெண் : அன்றாடம்…பூங்காற்று…
உன் பேரை…என் காதில் ஓதுது…
ஆண் : எப்போது…நான் வேண்டும்…
அப்போது பூங்காற்றை…தூது விடு…
பெண் : தோடி ராகம் பாடவா…
ஆண் : மெல்ல பாடு…
பெண் : ஆதி தாளம் போடவா…
ஆண் : மெல்ல போடு…
பெண் : மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் என்னை சேர்த்து…
ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…
ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…