பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஆ ஆஅ ஆஅ
ஹோ ஓ ஹோ ஓ
ஹா ஆ ஆ ஆ ஆஅ ஆஅ
ஆண் : காலை நேரம் இதமானது
காற்றின் ஈரம் பதமானது
விடியல் காணும் உலகம் யாவும்
இரவின் ஆடை களையும் வேளை
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்
ஆண் : காலை நேரம் இதமானது
காற்றின் ஈரம் பதமானது
குழு : …………………………..
ஆண் : பசும் சோலையில் வெயில் படும் வேளையில்
நின்று குளிர் காயும் மடல் பூத்த மலர் கூட்டம் தான்
கொடி மீதிலும் சின்ன செடி மீதிலும்
மெல்ல நடை போடும் விடை கூறும் பனி மூட்டம் தான்
ஆண் : தோட்டம் தோட்டமாய் கூட்டம் கூட்டமாய்
வாழும் பறவை ஈர சிறகை உலர்த்தும் பொழுது தான்
ஆண் : காலை நேரம் இதமானது
காற்றின் ஈரம் பதமானது
விடியல் காணும் உலகம் யாவும்
இரவின் ஆடை களையும் வேளை
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்
ஆண் : காலை நேரம் இதமானது
காற்றின் ஈரம் பதமானது
பெண் : ……………………..
குழு : .………………………….
ஆண் : இடையோடு தான் ஓட்டும் உடையோடு தான்
மெல்ல இசையோடு அசைந்தாடும் இளம் பாவைகள்
பாப் சாங் தான் நல்ல பிரேக் டான்ஸ் தான்
நித்தம் அதிகாலை பயில்கின்ற மயில் தோகைகள்
ஆண் : வாழை தண்டு போல் கீரை தண்டு போல்
காலும் நெளிய கையும் நெளிய ஆடும் அழகிகள்
ஆண் : காலை நேரம் இதமானது
காற்றின் ஈரம் பதமானது
விடியல் காணும் உலகம் யாவும்
இரவின் ஆடை களையும் வேளை
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்
ஆண் : காலை நேரம் இதமானது
காற்றின் ஈரம் பதமானது
ஹ்ம்ம் ம்ம் லா லா லா
ஹ்ம்ம் ம்ம் லா லா லா