திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை தந்தாச்சு......(திருமண)
கண்ணாலே பேசி மனசு கனிய வைக்கிற நீங்க
என்னதான் வேணும் இப்படி என்னையே பாக்குறீங்க
அன்னம் போல் முன்னே வந்து என்னை மயக்கும் பாவை
அச்சாரம் ஒண்ணே ஒண்ணு அவசியமாய் தேவை
கல்யாணம் ஆகும் முன்னே அவசரமா
கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா
கட்டுப்பாட்ட விட்டுக் கொடுக்கணும் அவசியமா
திருமண பொருத்தம் பார்த்தாச்சு.....
தாலி போட்ட பிறகு ஏது ஜாலி அதை
தடை செய்வாங்கம்மா பத்ரகாளி
குடித்தனத்திலே மருமகளுக்கு மாமி
என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி
என்ன கொடுமை செய்தாலும் அவள்தான் சாமி
மாமன் மாமி எங்கள் சாமி மாமன் மாமி எங்கள் சாமி
பொண்டாட்டி கிழிச்சக் கோட்ட தாண்டக்கூடாது
புருஷன் என்கிற மதிப்பை கொடுக்க தவறக் கூடாது
அடிக்கடி உங்கப்பா வீட்டுக்கு போகக் கூடாது
அடிச்சு ஒதைச்சு கொடுமை படுத்த நினைக்கூடாது
பொன்னான இன்பம் சேரணும்
மாமி மனசு மாறணும்
புதிய பாதையிலே போகணும்
பூலோக சொர்க்கமாக வேணும் – வாழ்வு
பூலோக சொர்க்கமாக வேணும்......(திருமண)