அல்லி விழி அசைய
அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய
மோகன இதழ் திறந்தே ஆ...ஆ...ஆ.
ஓவியம் சிரிக்குது........
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது
காவியக் கண்கள் ரெண்டும் காதலிசை பாடுது
கானமயில் போலே வந்து தானாக ஆடுது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
அருகினில் ஓடி வந்தே அமுத மொழி பேசுது
அமுத மொழி பேசுது
ஆசையோடு இன்பம் தன்னை
அள்ளி அள்ளி வீசுது
பருவமேனி வண்ணம் காட்டி
உரிமையோடு அழைக்குது...
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது
ஓவியம் சிரிக்குது உள்ளம் தன்னை மயக்குது