பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ……
பெண் : தெற்கு மலை காத்து வீசுது
இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது
தெற்கு மலை காத்து வீசுது
இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது
பெண் : கொட்டும் பனி முத்தமிடத்தான்
மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது
கொட்டும் பனி முத்தமிடத்தான்
மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது
பெண் : தெற்கு மலை காத்து வீசுது…ஓ…..ஓ…..
பெண் : ஆ…..ஆ…..அருவிகளில் குளித்த மகள்
தலை துவட்ட இங்கு மேகம் வந்ததோ
இளையவளின் மனம் தழுவ
குளிர் கொண்டு இங்கே தென்றல் வந்ததோ
பெண் : தாவும் பெண்ணுள்ளம் போலே
ஆடும் உல்லாச மயில்கள்
தாயின் தாலாட்டைப் போலே
பாடும் சங்கீத குயில்கள்
பெண் : துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான்
சொல்லி போகும் வண்ண மெட்டுதான்
துள்ளுகிற நதி என்னைத் தொட்டுத்தான்
சொல்லி போகும் வண்ண மெட்டுதான்
பெண் : தெற்கு மலை காத்து வீசுது
இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது
தெற்கு மலை காத்து வீசுது….ஓ…..ஓஒ….ஓ…
பெண் : ஆஅ…..ஆ…..இலைகள் எல்லாம் மரகதமோ
இறைவனின் தோட்டம் எங்கும் தங்கமோ
மலர்கள் எல்லாம் புதையல்களோ
மறைத்தவர் யாரோ அள்ளிச் செல்லவோ
பெண் : மான்கள் என்னோடு ஆட
மலர்கள் என்னோடு பேச
ஆஹா ஆனந்தம் எல்லாம்
அலையாய் என் மீது மோத
பெண் : பச்சை உடை கொண்ட மலையரசி
இங்கே உந்தன் இளவரசி
பச்சை உடை கொண்ட மலையரசி
இங்கே உந்தன் இளவரசி
பெண் : தெற்கு மலை காத்து வீசுது
இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது
தெற்கு மலை காத்து வீசுது
இங்கே ஜோடி கட்டி குருவியெல்லாம் பாட்டு பாடுது
பெண் : கொட்டும் பனி முத்தமிடத்தான்
மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது
கொட்டும் பனி முத்தமிடத்தான்
மலர் மொட்டுகளில் செம்பவழ வண்ணம் வந்தது
பெண் : தெற்கு மலை காத்து வீசுது……..ஓஒ….ஓ…