தேர் போல ஓடி வரும் மேகங்களே
தேன் போல சேதி ஒண்ணு கேளுங்களேன்
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
கௌரியக்கா பி.ஏ. பாஸுங்க.....(தேர்)
நூறு வேலி மாமா கொஞ்சம் பாருங்க
திரும்பி பாருங்க
காப்பி அடிக்காமலே கெளரி பாஸ் தானுங்க
கனியோடு உறவாடும் துரையய்யா
தெய்வ கனிவாலே முதலாக பாஸாயிட்டா
தினந்தோறும் ஒளி வீசும் திருநாளாய் வாழலாம் (தேர்)
லேன்ட்லார்ட் மாரி மாமா கேளுங்க
கொஞ்சம் கேளுங்க
படத்தில் நடிக்காமலே கிறுக்கு ஆன கைலாசம்
தமிழோடு விளையாடும் தமிழ் அய்யா
உங்க தயவான உறவால பாஸாயிட்டா
தடுமாறும் நிலை யாவும் இனிமேலே மாறிடும் (தேர்)