இந்திரன் சபையில் ஆடிடும் ரம்பை வா....நீ வா
இன்னிசை மழையில் புன்னகை சிந்திட வா நீ வா
அழகினை வரைந்தான் ரவிவர்மன்
அவனே திகைத்தான் உன் அழகில்
மை விழி மோகம் மையலிலே
கை வசம் கோடி கவிதைகளே
தமிழே செந்தமிழே அழகே பேரழகே..(இந்திரன்)
மின்னலே தென்றலே
வஞ்சிக்கொடி மஞ்சலிடும் கிளியே
கடல் போல் ஆசை கரையென்று சேரும்
நெஞ்சிலும் நினைவிலும் கொஞ்சிடும் கன்னியே
உன்னால் என் வாழ்விலே
நாளும் பொன்னான இன்பங்களே.....(இந்திரன்)
முகிலே நிலவே
கள்ளவிழி சொல்லித் தரும் கனவே
என்னைப் போல் யோகம் எவருக்கும் இல்லை
பொன்னிலும் பூவிலும் மின்னிடும் ஓவியம்
கண்ணால் ஒரு ஜாடையில்
காதல் கதை ஒன்று அரங்கேறுமே....(இந்திரன்)