தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
இதுவரையில் எதைக்கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தாயே எதற்காக
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
ஒரு நாள் எனை பிரிந்தாலும் வாடிய முகமே
உனை இனி எங்குப் பார்ப்பது ஓ
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய
மனமே உனை எதைத்தந்து மேய்ப்பது
அழுதிடக்கூடாதென்று அறிவுறை கூறுவாய்
அழுகையை நீயே தந்து போனாயே
உறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களே
நிரந்தரத் தூக்கம் என்ன ஆண் தாயே
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு
உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய்
அது என்ன ஆனது ஓ
தலைமேல் சுமை இருந்தாலும் புன்னகை
தருமே இதழ் அது எங்குப்போனது
நடந்திடப்பாதம் தந்து வழிக்காட்டினாய்
நடுவிலே முந்தி சென்றாய் என் செய்வேன்
எது எது இல்லையென்று எனக்கென வாங்கினாய்
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்
தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு