தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா
தண்ணீரில் தள்ளாடும் மண்வீடு போலாச்சு....
திசை மாறும் ஓடம் போல
தடுமாறும் வாழ்க்கை இங்கே
போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா – ஓடம்
கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா
எப்போதும் தாகம் இங்கே கண்ணீராலே தீராது
கண்ணீரின் சோகம் நீக்க ஈரமுள்ள நெஞ்சேது
வேடிக்கை தெய்வத்தின் வாடிக்கை தானம்மா
வாடிக்கை தானம்மா....வாடிக்கை தானம்மா..(தண்ணீரில்)
நூல் கொண்டு ஆடும் பொம்மை
அது கையில் ஒன்றும் இல்லை
தானாக ஆடாதடி கண்ணம்மா –எல்லாம்
விதி தேவன் எண்ணம் தானோ சொல்லம்மா
காப்பாற்றும் தெய்வம் இன்று கண்ணாமூச்சி ஆடுது
கண்கட்டு வித்தை ஒன்று நாளும் மேடை ஏறுது
கை நீட்டும் பாசங்கள் கை கழுவும் மோசங்கள்
கை கழுவும் மோசங்கள் கை கழுவும் மோசங்கள்..(தண்ணீரில்)