சந்தோஷமே உல்லாசமே சங்கீதமே
சம்சாரமே எப்போதுமே தெய்வீகமே
அன்னை தந்த சொந்தம் தொடரும் நூறு பந்தம்
கோடி கோடி ஆண்டு காலம் மண்ணில் வாழுமே (சந்தோஷமே)
மங்கை என்பவள் ஒரு நதியை போன்றவள்
கடலைத் தேடியே அவள் பயணமாகிறாள்
பந்தம் என்பது புது உறவு காணுது
சொந்தம் என்பது நல்வரவு ஆகுது
சொந்த பந்தம் வானவில்லை மாலையாக்குமே
சொர்க்கமே அங்குதான் உதயமாகுமே...(சந்தோசமே)
மனித வாழ்விலே வரும் உறவு என்பது
மறைந்த போதிலும் அது தொடர்ந்து வாழ்வது
பாசம் என்பது ஒரு சங்கு போன்றது
வெந்த போதிலும் அது வெண்மையானது
அன்பினாலே மலையைக் கூட அசைத்து காட்டலாம்
பண்பினால் கடலுமே அடிமையாகலாம்..(சந்தோஷமே)