பாடகர்கள் : பி. சுஷீலா, வாணி ஜெயராம்,
எல். ஆர். ஈஸ்வரி, சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்
பெண்கள் : நீராருங் கடலுடுத்த
நிலமடந்தை கெழிலொழுகும்
ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….
பெண்கள் : சீராரும் வதனமெனத்
திகழ் பரதக் கண்டமிதில்
ஆண் : ஏ….ஏ…..ஏ….ஏ
பெண்கள் : தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிட நல் திருநாடும்
ஆண் : ஓ ஓஒ…..ஆ….ஆ….
பெண்கள் : தக்க சிறு பிறைநுதலும்
தரித்தநறு திலகமுமே
ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ…
பெண்கள் : அத்திலக வாசனைப்போல்
அனைத்துலகும் இன்பமுற
ஆண் : ஆ…ஆ….ஆ….ஆ…
பெண்கள் : எத்திசையும் புகழ் மணக்க
இருந்தபெருந் தமிழிணங்கே
ஆண் : ஹோ ஓ……
பெண்கள் : தமிழிணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே…..
வாழ்த்துதுமே…..