சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை சொன்னால்தான் தெரியுமோ அன்னமே
இதை தன்னால் அறியாதவர்
என்னே ஆண் பிள்ளை இவர்.....(சொன்னால்)
பொன்னம்பல நடன மன்னன் திருக்குமரன்
புள்ளி மயிலோனுக்கு உள்ளமெல்லாம் திறந்து
சொன்னால்தான் தெரியுமோ அன்னமே இதை
சொன்னால்தான் தெரியுமோ
ஓடையிலே நீரோடையிலே – மலர்
சூடையிலே விளையாடையிலே
வாசமலர் கதம்பினோடு ஜவ்வாதணிந்து
வந்தான் முருகன் அந்த வழிதனிலே
ஜாடை பல காட்டினேன் மையல் மிகுந்து
சந்தமிகும் பதங்களும் பாடினேன்....போடி..
கொஞ்சமும் அவன் புரிந்து கொள்ளவே இல்லை
ஓடி அழைத்துக்கொண்டு வாடி மனம் திறந்து (சொன்னால்)