மானமே பிரதானம் இதை நாம்
மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்
வாழ் வரினும் தாழ்வு வரினும்
வையகத்தில் மாசில்லாத.....(மானமே)
மாடும் கன்றும் இருந்தாலும்
மக்கள் சுற்றும் நிறைந்தாலும்
கோடி செல்வம் குவிந்தாலும்
பட்டம் பதவியில் சிறந்தாலும்
இருந்தும் இல்லாதவரே – மானம்
இழந்த பேர்கள் பதரே – அதனால் (மானமே)
செல்வம் என்றும் நில்லாது – அது
திரும்பப் பலநாள் செல்லாது
சென்ற மானம் திரும்பாது – கண்கண்ட
உண்மை இது தவறாது......(மானமே)
மானம் இழந்தால் அவமானம்
மனிதன் காணும் வெகுமானம் – இதை
மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று
புகழைத் தேட வேணும் – உலகில்...(மானமே)