பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹா……ஆஅ…..ஆ……ஆ……ஆ…..ஆஅ…..
ஹா……ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..ஆஅ……
……………………………
ஆண் : சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
மாலை எடுத்து வாரேன்
மச்சானே நாள் பார்த்து
உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது……..
பெண் : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம்
குழு : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம்
ஆண் : இஷ்டப்படி அங்கும் இங்கும்
துள்ளி வந்த காளை என்ன
நீ பார்த்த வேளை
கட்டுப்பட்டு நின்னதென்ன
பெண் : பொன்னி நதி போல எங்கும்
பொங்கி வந்த கன்னி என்ன
கல்லணையப்போல
கட்டி வெச்ச மாயமென்ன
ஆண் : என்ன இது மாயம்
என்னென்னமோ கண்டேனே
பெண் : நானும் ஒன்னபோல
கேள்வி ஒண்ணு கேட்டேனே
ஆண் : தட்டுகெட்ட நானும் மாற
காரணமே நீதானே
பெண் : ஆஹா உன்னப் பாத்து பாத்து
ரசிச்சேனே நான்தானே
ஆண் : சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
பெண் : மாலை எடுத்து வாங்க
மச்சானே நாள் பார்த்து
உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது……..
குழு : ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஓ
ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஊ ஹூ ஓஒ ஓ
ஹூ ஹூ ஹூ ஓஒ
ஹூ ஹூ ஹூ ஓஒ
பெண் : பூவிருக்கும் சோலையெல்லாம்
பூங்குயிலப் போலிருந்து
நான் பாடப்போறேன்
மன்னவனின் பேரெடுத்து
ஆண் : ஆடி வரும் தேகமென்ன
அள்ளித்தந்த மோகமென்ன
தீராத தாகம்
தீர்த்து வெக்கும் நேரமென்ன
பெண் : எண்ணங்களைப் போல
ஒண்ணுக்கொன்ணு சேர்ந்தோமே
ஆண் : உள்ள கதப் பேசி
ஒத்துமையா வாழ்வோமே
பெண் : சோகமிது மாறிப்போகும்
சொந்தமிது மாறாது
ஆண் : தோளில் நானும் சேரும்போது
வேணான்னு சொல்லாது
பெண் : சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
ஆண் : சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
பெண் : மாலை எடுத்து வாங்க
மச்சானே நாள் பார்த்து
ஆண் : உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது……..
பெண் : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம்
குழு : அஹா…..ஹுஹ்மம்ஹ்ம்ம்