பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : அண்ணனுக்கு ஜே… ஜே…
தலைவனுக்கு ஜே… ஜே…
ஆண் குழு : அண்ணனுக்கு ஜே… ஜே…
அண்ணன் எப்பவுமே ஜே..ஜே…
எங்க தலைவனுக்கு ஜே… ஜே…
தலைவன் எப்பவுமே ஜே..ஜே…
ஆண் குழு : இந்த ஊரெல்லாம் அண்ணன் வூடு…
இந்த உலகெல்லாம் அண்ணன் பேரு…
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்…..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே…
எங்க அண்ணனத்தான் நம்பி இருக்கோம்…..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே…
ஆண் : எனக்கெதுக்கு ஜே…ஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ..சீ…
போடு தலைவனுக்கு ஜே..ஜே…
அது எனக்கெதுக்கு சீ…சீ…
ஆண் : இந்த ஊரெல்லாம் என் ஊருன்னா…
அத உடனே நீ காலி பண்ணுடா……..
ஒருத்தனையும் நம்பாதடா……..என் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா ஆமாம்…….
ஒருத்தனையும் நம்பாதடா…….என் தம்பி
உன்ன மட்டும் நம்பி இருடா டோய்…….
ஆண் குழு : அண்ணனுக்கு ஜே… ஜே…
ஆண் : வேனாயா யோவ்
ஆண் குழு : அண்ணன் எப்பவுமே ஜே..ஜே…
ஆண் : அட வேணான்னா
ஆண் குழு : எங்க தலைவனுக்கு ஜே… ஜே…
ஆண் : கோவம் வரும் எனக்கு
ஆண் குழு : தலைவன் எப்பவுமே ஜே..ஜே…
ஆண் : கூழுக்கும் கஞ்சிக்கும் வாடுது…
ஏழைக்கு ஏற்றம் இல்லே..
ஆட்சிகள் எத்தனை மாறுது…
நம்ம வாழ்க்கையில் மாற்றம் இல்ல…
ஆண் : அவனவனின் வேல அவனவனுக்கிருக்கு…
ஒன்ன எவன் பாப்பான் போடா……போ…
உன்னுடைய வாழ்வு உன் உழைப்பில் இருக்கு….
ஒன்ன நம்பி மேலே வாடா வா…
மேல வந்தா இந்த ஊரு உலகம்
அட ஜே ஜே போடும் பாட்டு கூட பாடும்…
ஆண் குழு : அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே…
அண்ணனுக்கு ஜே… ஜே…
ஆண் : இதானே வேணாகிறது
ஆண் குழு : அண்ணன் எப்பவுமே ஜே ஜே
ஆண் : கொஞ்சம் இருங்கடா டேய்
எனக்கேதுக்கு ஜெ ஜே
எனக்கது புடிக்கவில்லே சீ சீ
ஆண் : சொந்தங்கள் இல்லே சம்சாரிதான்
ஊருண்டு உலகமுண்டு…
பந்தங்கள் உண்டு அனாதை நான்..
யாருண்டு எவனுமில்ல…
ஆண் : அண்ணனோட பாரம் பிளாட் பார்ம்தான்
கண் முழிச்சு பாரு ரோட்டோரம்…
தட்டிக் கேட்கும் வீரம் எந்நேரந்தான்
கட்டிக்குற மாட்டேன் சம்சாரம்…
நேத்து இல்ல…இந்த கூட்டம் எனக்கு..
என்ன தோள் மேல் தூக்கி ஜே ஜே….போடும்…
ஆண் குழு : அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே…
ஆண் : சபாஷ்
ஆண் குழு : அண்ணன் எப்பவுமே ஜே..ஜே…
ஆண் : அய்யே எனக்கது புடிக்கவில்லே சீ சீ
ஆண் குழு : எங்க தலைவனுக்கு ஜே ஜே
ஆண் : கோவம் வரும் அது எனக்கெதுக்கு சீ சீ
ஆண் குழு : இந்த ஊரெல்லாம் அண்ணா ஊரு
ஆண் : அத ஒடனே நீ காலி பண்ணுடா டோய்
ஆண் குழு : எங்க அண்ணணத்தான் நம்பி இருக்கோம்..
அட நாங்க வம்பிழுக்கும் தம்பிகள் இல்லே…
ஆண் : நான் பாடுறேன் இருங்கடா…
அட ஒருத்தனையும் நம்பாதடா…
என் தம்பி உன்ன மட்டும் நம்பி இருடா..
ஆண் குழு : அண்ணனுக்கு ஜே… ஜே…
ஆண் : அடிச்சேனா பாரு…
ஆண் குழு : அண்ணன் எப்பவுமே ஜே..ஜே…
ஆண் : வாய மூடுங்கடா சோம்பேறிகளா…
எனக்கெதுக்கு ஜே…ஜே..
எனக்கது புடிக்கவில்ல சீ…..சீ…..சீ……சீ…..