சர சர சரவெடி அழகுல வெடிச்ச
நீ வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல மனசையும் வெடிச்ச
சர சர சரவெடி கனவுல வெடிச்ச
நீ வெடிச்ச வெடிச்ச
நெனைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச
பொட்டக் காடும் பூ பூக்க
நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற
சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார
பட்டாம் பூச்சி நானாக
நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்கிற
வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார
வலையல தொலஞ்சத போல
ஏன் ஒதட்ட நீ சுழிச்சுட்டு போற
தொவையலு அரைச்சது போல
என் உசுரையே வளைசுட்டுப் போற
சர சர சரவெடி கனவுல வெடிச்ச
நீ வெடிச்ச வெடிச்ச
நெனைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச
சரணம் - 1
கருவேலங்காடு கிளி வாழும் கூடு
நெடுநாளா ஆச வெச்சேன் நெஞ்சுக்குள்ள
அதத் தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல
நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து
நான் உத்துப் பாக்க போக நீயும் வேர்த்து
வெகு தூரம் போக வேணும்
அட நீயும் நானும் கைய கோர்த்து
சர சர சரவெடி அழகுல வெடிச்ச
நீ வெடிச்ச வெடிச்ச
சிரிக்குற சிரிப்புல மனசையும் வெடிச்ச
சரணம் - 2
மழையோட வாசம் அது தானே நேசம்
வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு
கருவாட்டுச் சாரல் வாசம் காதல் ஆச்சு
நா வைக்கப் போறேன் இலைவாழ தோப்பு
நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு
ஒன்னாக சேரும் போது
நமக்குள்ள வேணாம் காப் பு காப் பு