மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டுப் போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாளே
ஆளத் தின்னுப் போறாளே
ஆட்டம் போட வெச்சாளே
அந்தரத்தில் என்னத் தான்
பத்த வச்சிட்டாளே
அவ தூரம் நின்ன தூறலு
என் பக்கம் வந்த சாரலு
அவளாலே நான் ஆனேன் ஈசலு
அவ மேலே ரொம்ப ஆவலு
அதனாலே உள்ளே மோதலு
அவ என்னோட காவல் ஏஞ்சலு
வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
ஆடாதே நீயும் லூசா லூசா
சரணம் - 1
அவள் ஒரு அழகிய கொடும
அத புலம்பிட பொலம்பிட அருவ
நெதம் என்ன பாத்ததும்
ஏறிப் போச்சு பெரும
அவ ஒரு வகையில இனிமை
அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும
எனத் தொட்டுப் பேசிட
கூடிப் போச்சு தெறம
அவ நேருல வந்தா போதும்
தெருவெல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும் தீபம் (2)
மேலே மேலே தான்னாலே
என்னக் கண்டுப் போனாளே
அந்தப் புள்ள தன்னாலே
நெஞ்ச அள்ளிட்டாளே
சரணம் - 2
கடவுள துதிப்பவன் இருப்பான்
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்
அட அவளப் பாத்திட எல்லாத்தையும் மறப்பான்
ஒலகத்த ரசிப்பவன் இருப்பான்
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்
அவ கூட நின்னவன் கண்ணத் தானே இழப்பான்
அவ ஒரு முற வெச்ச காரம்
என் உசுருல நித்தம் ஊரும்
அவ தீராத நீராகாரம் (2)
பல்லவி
மேலே மேலே தன்னாலே ....