பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
பெண் : ………………..
பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு
காத்திருக்கு தேனாட வா……ஆ…..
வா வா பள்ளியறை மல்லிகையை
அள்ளி வைத்து கொண்டாட வா…..ஆ….
ஆஹா பாலாடை தேகத்தில்
மேலாடை நீயாக வா…….
பெண் : …………………..
பெண் : மாப்பிள்ளையே கள்ளூறும்
முல்லை மொட்டில் முள்ளில்லையே
என்னோடு பின்னிக் கொண்டு
தோளோடு தோள் சேர்க்க
நீயின்றி ஆளில்லையே….ஏ…..
பெண் : என்னைப் போன்று இசைபாடி
எங்கும் பார்த்ததுண்டா
தப்பிக் கொண்டு சென்றாலும்
தட்டி கேட்பதுண்டா….
பூச்சூட நாளில்லையா…..ஆ……
பெண் : ………………………
பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு
காத்திருக்கு தேனாட வா……ஆ…..
வா வா பள்ளியறை மல்லிகையை
அள்ளி வைத்து கொண்டாட வா…..ஆ….
ஆஹா பாலாடை தேகத்தில்
மேலாடை நீயாக வா…….
பெண் : தேன் பார்க்கவா உன்னை நான்
தட்டிச் செல்ல நாள் பார்க்கவா
சிங்கார காதல் கண்ணா உன் மீது
கண் வைத்தேன் என் எண்ணம் ஈடேறுமோ….ஆ…..
பெண் : கொத்தும் என்று எண்ணாதே
கட்டி போடு என்னை
இஷ்டம் போல உட்கார
இங்கே உண்டு திண்ணை
என்னாசை தேடும் உன்னை…..
பெண் : …………………………..
பெண் : ரோஜா ராத்திரிக்கு பூத்திருக்கு
காத்திருக்கு தேனாட வா……ஆ…..
வா வா பள்ளியறை மல்லிகையை
அள்ளி வைத்து கொண்டாட வா…..ஆ….
ஆஹா பாலாடை தேகத்தில்
மேலாடை நீயாக வா…….ஆ……