பாடகர்கள் : இளையராஜா மற்றும் சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஏ…..விடியாத பொழுதாச்சு…
அடியே…….விழி கூட சுமையாச்சு…
கண்ணீரு கடலாச்சு
உன் எண்ணம் படகாச்சு…
நீ உள்ள மனம் தானே
எப்போதும் சிறையாச்சு…
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள
ஒத்தையில இந்தக்கிளி
சுத்துதம்மா
பெண் : தனியா இது இருந்தா
மனம் உறங்காது
துணையே உன்னை இழந்தா
இங்கு வாழ்வேது
பெண் : என் ஆசை ராசா
அன்பென்ன லேசா
என் ஆசை ராசா
இவ அன்பென்ன லேசா
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள
ஒத்தையில இந்தக்கிளி
சுத்துதம்மா……
ஆண் : ஓஓ….ஓஓ…..ஓஓ…
ஓஓஓ……ஓஓ……ஓஒ…..
பெண் : காத்தாலே ஆடி வரும்
சிறு ஓலைக் காத்தாடி
கயிறு அறுந்து போனதென்ன
ராசா உன் கையாலே
பெண் : காத்தாலே ஆடி வரும்
சிறு ஓலைக் காத்தாடி
கயிறு அறுந்து போனதென்ன
ராசா உன் கையாலே
ஆண் : ஏ… தேனே ஒன்னால தானே
புண்ணாகித்தான்……போனேன்
இப்போது நானே
ஆண் : பூவான நெஞ்சம்
இது வீணாச்சு உன்னால
பூ மாலை வெயிலில
சருகாச்சு தன்னால
ஆண் : என் வீட்டு ரோசா
அன்பென்ன லேசா
என் வீட்டு ரோசா
என் அன்பென்ன லேசா
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள
ஆண் : கண்ணீரு வந்து வந்து
காவேரி போலாச்சு
கண்ணான பொண் மனசு
கல்லாகிப் போயாச்சு
ஆண் : கண்ணீரு வந்து வந்து
காவேரி போலாச்சு
கண்ணான பொண் மனசு
கல்லாகிப் போயாச்சு
பெண் : பூங்……..காத்து இப்ப
என்னப் பாத்து வதைக்கிறது
என்ன என்ன கூத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து
ஆண் : போராடும் நெஞ்சுக்குள்ளே
ஏதேதோ உண்டாச்சு
நீரோடும் கங்கை நதி
ஏன் இப்போ ரெண்டாச்சு
பெண் : என் ஆசை ராசா
அன்பென்ன லேசா
என் ஆசை ராசா
இவ அன்பென்ன லேசா
பெண் : ரெட்டக்கிளி சுத்தி வந்த
தோப்புக்குள்ள
ஒத்தையில இந்தக்கிளி
சுத்துதம்மா
பெண் : தனியா இது இருந்தா
மனம் உறங்காது
துணையே உன்னை இழந்தா
இங்கு வாழ்வேது
பெண் : என் ஆசை ராசா
அன்பென்ன லேசா
என் ஆசை ராசா
இவ அன்பென்ன லேசா