பாடகி : சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹா….ஆஅ…..ஆஅ……
ஹா……ஆஅ…..ஆஅ…..ஆஆ
பெண் : கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
பெண் : மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
பெண் : கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு….
பெண் : சேலையில தூளி கட்ட
தெக்குப் பக்கம் காத்து வரும்
சோலையில பூவத் தொட்டு
மெட்டு ஒண்ணு பாடி வரும்
பெண் : காட்டத் தொட்டு மேட்டத் தொட்டு
ஆரிராரோ பாட்டுச் சத்தம்
ஆட்டுக் குட்டி போட்ட குட்டி
கேட்டுப் புட்டு தூங்கி விடும்
பெண் : ஆத்தோரம் பாடுற தூளி
நான் போட்டேன் உனக்காக
நான் பாடும் பாட்டையும்
கேட்டு நீ தூங்கு கணக்காக
ஆரோ ஆரோ ஆரீ ராரோ ராரோ
பெண் : கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
பெண் : மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
பெண் : கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு….
பெண் : அஞ்சறிவு ஜீவன் எல்லாம்
ஆதரவா வாழும் போது
ஆறறிவு உள்ளதெல்லாம்
அக்குவேறு ஆணிவேரு
பெண் : உங்க போல சேர்ந்து வாழ
இங்க ஒரு சாதி இல்லை
நீங்க வாழும் வாழ்வு போல
இங்க ஒரு நீதி இல்லை
பெண் : அன்பால ஊட்டுற
பாலு ஆறாக ஊறுமடி
அன்றாடம் வாழுற பாசம்
அலையாக ஆடுமடி
கண்ணே பொன்னே
சின்னப் பூவே தேனே
பெண் : கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
நீயோ சிறு பிள்ளை
மணம் வீசும் கொடி முல்லை
பெண் : மானே மயிலே கலங்காதே
துணை நான்தான் இனி மேலே
பெண் : கண்ணே என் கண்ணா நீ
கண் தூங்கு கண் தூங்கு….