பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
பெண் : ஆ…..ஆஅ……ஆ……ஆ……ஆ….ஆ….
ராகம் தாளம் பாவம் மேவும்
கீதம் சங்கீதமாகும்…
பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்
கீதம் சங்கீதமாகும்
ஸ்ருதியோடும் லயத்தோடும்
சுகமாய் நெஞ்சில் பொங்கும்
பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்
கீதம் சங்கீதமாகும்….
பெண் : காலைப் பொழுதோடு கதிர் தோன்றும்போது
காற்றும் பூபாளம் பாடும்
மூங்கில் கிளை மீது பூங்காற்று மோத
கொஞ்சும் குழலோசை கேட்கும்
பெண் : கடல் மேல் அலையாட கரை மேல் விளையாட
இரண்டும் உறவாட இணைந்தே இசை பாட
இனிமைகள் கூடும் நாளும் நெஞ்சில் பொங்கும்
பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்
கீதம் சங்கீதமாகும்
ஸ்ருதியோடும் லயத்தோடும்
சுகமாய் நெஞ்சில் பொங்கும்
பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்
கீதம் சங்கீதமாகும்….
பெண் : வாழும் நாளெல்லாம் இசைதானே ஜீவன்
ஞானம் கொடுத்தானே தேவன்
சக மக சமதநி மத நிச
ஏழு ஸ்வரம் தானே நான் சூடும் மாலை
இதுதான் கல்யாண மேடை
பெண் : பிறந்தேன் இசைக்காக வளர்ந்தேன் அதற்காக
உலகின் உறவெல்லாம் இனிமேல் எதற்காக
அலையென நாதம் மோதும் நெஞ்சில் பொங்கும்
பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்
கீதம் சங்கீதமாகும்….
ஸ்ருதியோடும் லயத்தோடும்
சுகமாய் நெஞ்சில் பொங்கும்
பெண் : ராகம் தாளம் பாவம் மேவும்
கீதம் சங்கீதமாகும்….