புதுமலர் ரோஜா நானே எந்தனை
பிடித்திடவே இயலாதே
மாமதியின் வெண்ணொளி தனிலே
மின்னும் எழில் பிம்பம் நான்...
கோகிலம் போல் கீதம் பாடும்
கன்னலிசைக் கலைவாணி நான் ராஜா
என் ராஜா எந்தனைப் பிடித்திடவே இயலாதே..
உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளும்
ரதிமுக ரஞ்சித ராணி நான் உன்
ரதிமுக ரஞ்சித ராணி நான்..
தகிட தகிட தகதிமி தகஜூணு
தகஜூணு தக திமி திமியென
நாட்டியம் ஆடும் மோகினி நான் ராஜா
என் ராஜா எந்தனைப் பிடித்திடவே இயலாதே..
ஈடில்லா இன்பம்தனிலே
பேசிட மொழியும் வருமோ ராஜா
உன் காதலி நானே உன் ஜோதி நானே
என் ஜீவன் நீயே மட்டில்லாத பேரானந்தம்
மறந்து போவோமே லோகம் ராஜா என் ராஜா
என் ராஜா எந்தனைப் பிடித்திடவே இயலாதே..