பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன்
பெண் : {பொதிகை மலை சாரலிலே
பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே
பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே
பூப்பறித்தால் ஆகாதோ} ( 2 )
பெண் : அருவியிலே நான் குளிக்க
அருகினிலே நீயிருக்க
கார்க்குழலாள் கண்ணசைத்தால்
உன் தேகம் பாய் விரிக்கும்
பெண் : மாங்கனியில் சுவையிருக்க
பூங்கொடியை நீயணைக்க
ஊர்வசியோ மேனகையோ
யாருமில்லை எனக்கீடு
பெண் : பொதிகை மலை சாரலிலே
பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே
பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே
பூப்பறித்தால் ஆகாதோ
பெண் : மைவிழிகள் தான் சிவக்க
மயக்கத்திலே நான் மிதக்க
மன்மதனின் லீலைகளை
மஞ்சத்திலே நான் படிக்க
பெண் : பார்வையிலே ஆயிரந்தான்
அர்த்தங்களை காணுகிறேன்
என்னோடு நீயிருந்தால்
கனவுகளும் நிறைவேறும்
பெண் : {பொதிகை மலை சாரலிலே
பூவொன்று பூத்திருக்கு
பூத்திருக்கும் வேளையிலே
பூப்பறித்தால் ஆகாதோ
பூத்திருக்கும் வேளையிலே
பூப்பறித்தால் ஆகாதோ…} (2)…ஓஓ..