பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன்
ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
ஆண் : நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது
நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது
அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது
ஆண் : கோடை நாளில் நீருமில்லை
ஓடைக்கென்ன நிந்தனை
உதடு உண்டு முத்தம் இல்லை
நான்கு கண்ணில் வேதனை
விதி வந்துதான் ஏதோ தடைப்போட்டது
இதற்காகவா தாலி முடிப் போட்டது
ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
ஆண் : இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது
இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது
பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது
ஆண் : சாதி இங்கே சதிகள் செய்தால்
நீதி எங்கே போவது
வேலி வந்து காலில் தைத்தால்
பயணம் என்ன ஆவது
துயர் தீருமே கொஞ்சம் மயங்காதிரு
சுகம் ஆகுமே நெஞ்சே கலங்காதிரு
ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
உறவை பிரித்தால் உலகம் எங்கே
ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே
இமைகள் இங்கே விழிகள் எங்கே
கணவன் தானே குழந்தை இங்கே
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ…