பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
ஆலமரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !