பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு
நல்லோர்கள் மேலோர்கள் சாத்திரங்கள் கொண்டு
நலமாக வாழியவே நல்லறம் கண்டு
பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பெண் : பெண் கழுத்தில் விழுவதென்ன மூன்று முடிச்சு
ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு
ஒன்று பெற்றோர்க்கு அடங்கியவள் என்னும் முடிச்சு
கணவனுக்கே உடமை என்னும் இரண்டு முடிச்சு
மூன்று கடவுளுக்கு பயந்தவளாய் காட்டும் முடிச்சு
பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பெண் : நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது
ஆஅ…..ஆ……ஆ……ஆஅ……ஆ….
நேரிழையாள் கழுத்தில் உள்ள தாலி என்பது
அது நிமிர்ந்து வரும் ஆடவரை விலக சொல்வது
கோமகனின் காலில் உள்ள மிஞ்சி என்பது
அது துணிந்து வரும் வஞ்சியரை விலக சொல்வது
பெண் : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாழியவே இல்லறம் கண்டு
பெண் : பாலைப் போல தூய்மை தன்னை
வளர்த்து கொள்கிறார்
அவர் பழத்தை போல இனிமை தன்னை
பகிர்ந்து கொள்கிறார்
பாலைப் போல தூய்மை தன்னை
வளர்த்து கொள்கிறார்
அவர் பழத்தை போல இனிமை தன்னை
பகிர்ந்து கொள்கிறார்
பெண் : குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு….
குன்று போல எரிவதென்ன குத்துவிளக்கு
அது கோலம் போட்டு காட்டுவது குடும்ப விளக்கு
குடும்ப விளக்கு……