பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : வி. குமார்
பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
வற்றாத தீபம் சிந்தும் ஒளிப்போல வாழ்க
மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
பெண் : சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை
தன் கூந்தல் சூடிக் கொண்டாள் பாஞ்சாலி கோதை
சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை
தன் கூந்தல் சூடிக் கொண்டாள் பாஞ்சாலி கோதை
கண்ணான தர்மன் இங்கே பகைவோரும் எங்கே
பங்காளி உன்னைக் கண்டால் பகையாளி எங்கே
பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
பெண் : ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே
அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே
ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே
அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே
காண்டீபம் இங்கே உண்டு களம் ஒன்று இங்கே உண்டு
கண்ணா உன் வில்லை எங்கே வைத்தாயோ இன்று
பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
பெண் : இப்போது எழுபத்தைந்து இன்னும் நூறாண்டு
இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு
இப்போது எழுபத்தைந்து இன்னும் நூறாண்டு
இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு
பெண் : ராஜா உன் உள்ளம்தானே பொய்யை சொல்லாது
ராஜா உன் உள்ளம்தானே பொய்யை சொல்லாது
தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது
தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது
பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
வற்றாத தீபம் சிந்தும் ஒளிப்போல வாழ்க
பெண் : மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க