பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : பச்சை மாமலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர்றே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
ஆண் : பச்சை மாமலைபோல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர்றே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
ஆண் : இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே
ஆண் : ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாதம் மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
ஆண் : ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாதம் மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் கலைஞன் அம்மா
அரங்கமா நகர் உளானே