பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் குழு
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
அவன் கன்னம் வைத்து திருடி வந்த
கதைகள் பல கோடி
பெண் : கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
அவன் கன்னம் வைத்து திருடி வந்த
கதைகள் பல கோடி
குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
அவன் கன்னம் வைத்து திருடி வந்த
கதைகள் பல கோடி
பெண் : நல்லதற்குத் திருடுவதும்
நாணயந்தான் தோழி
நல்லதற்குத் திருடுவதும்
நாணயந்தான் தோழி
அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு
வாழ்த்துரைப்போம் வாடி
குழு : அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு
வாழ்த்துரைப்போம் வாடி
பெண் மற்றும் குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
அவன் கன்னம் வைத்து திருடி வந்த
கதைகள் பல கோடி
பெண் : தர்மம் செய்யாதவரின் வீடுகளை
நாடி நாடி
குழு : நாடி நாடி
பெண் : நம் தலைவன் திருப்பணிக்குப்
பொருள் எடுப்போம் தேடி தேடி
குழு : தேடி தேடி
பெண் : தர்மம் செய்யாதவரின் வீடுகளை
தேடி தேடி
நம் தலைவன் திருப்பணிக்கு
பொருள் எடுப்போம் தேடி தேடி
மர்மம் எதுவும் இல்லை மனது சுத்தம் தோழி
குழு : மர்மம் எதுவும் இல்லை
மனது சுத்தம் தோழி
பெண் : நம் மனதுக்கு நீதியென்றால்
மனிதருக்கே நீதி
குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
அவன் கன்னம் வைத்து திருடி வந்த
கதைகள் பல கோடி
பெண் : நல்லதற்குத் திருடுவதும்
நாணயந்தான் தோழி
அதை நாட்டி வைத்த கண்ணனுக்கு
வாழ்த்துரைப்போம் வாடி
குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
அவன் கன்னம் வைத்து திருடி வந்த
கதைகள் பல கோடி
குழு : கண்ணனுக்கும் கள்வனுக்கும்
பேதமில்லை தோழி
அவன் கன்னம் வைத்து திருடி வந்த
கதைகள் பல கோடி
கைதட்டல்கள் : ………………………..