பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
இந்த மீசை வச்ச குழந்தைக்கு
என் பாட்டு போதுமா
பிள்ளையே பிள்ளையே
உன் மனம் வெள்ளையே
கள்ளம் கபடம் இல்லையே
பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
இந்த மீசை வச்ச குழந்தைக்கு
என் பாட்டு போதுமா
பெண் : புள்ளைங்க வேணுமின்னா
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
ஒரு புள்ளையே தேர்ந்தெடுத்து
நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்
பெண் : கர்ப்பத்துல நம்ம புள்ள…..
நீங்க மட்டும் என் புள்ள
கர்ப்பத்துல நம்ம புள்ள
நீங்க மட்டும் என் புள்ள
உன்ன போல நல்ல புள்ள
ஊருக்குள் யாரும் இல்ல
ஆண் : முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா
இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா
நேத்து நான்……மிருகமா..
இன்னைக்கு மாற்றமா தாலி செஞ்ச மாயமா
ஆண் : முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா
இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா
ஆண் : கற்ப கெடுத்தவனே
நீ கையில் எடுத்துக்கிட்ட
ராவணன் போல் இருந்தேன்
நீ ராமனா மாத்திப்புட்டே
ஆண் : மாலை தந்த நேரமடி….
மாமனுக்கு ஞானமடி
மாலை தந்த நேரமடி….
மாமனுக்கு ஞானமடி
உன்ன விட்டா கண்ணு எனக்கு
உறவு வேறில்லே…..
பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
ஆண் : இந்த மீசை வச்ச குழந்தைக்கு
உன் பாட்டு போதுமே
பெண் : பிள்ளையே…..
ஆண் : பிள்ளையே…….
பெண் : உன் மனம் வெள்ளையே…
ஆண் : கள்ளம் கபடம் இல்லையே….
பெண் : பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
பாட்டு பாடலாம்
ஆண் : இந்த மீசை வச்ச குழந்தைக்கு
உன் பாட்டு போதுமே….