பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ….
ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல
ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம்
பட்டு தொட்டில்தான்
எனக்கு தொட்டிலென்னமோ
குப்பத் தொட்டிதான்..
ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல
பெண் : ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ
ஆண் : என்னமோ உலகத்தையே புடிக்கலையே
என்னையும் உலகத்துக்கு புடிக்கலையே
துன்பத்துக்கு பொறந்தவன் இந்தப் புள்ளையே
என்ன தொப்புள்கொடி அறுத்தவ கொல்லவில்லையே
ஆண் : அழுதேனே……..ஓ….ஓ….ஒ…..
அழுதேனே அழுதேனே
கண்ணீருக்கும் ஈரமில்ல
ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல
பெண் : ஆரிரோ ஆரிரோ…..
ஆண் : நானழுத நேரத்திலே யாரும் வரல்ல
ஊரழுத வேளையிலே நானும் வரல
எனக்கென்ன சாபமோ வெளங்கலையே
துப்பறிஞ்சு பார்க்குறேன் தொலங்கலையே
ஆண் : திசையெங்கே…ஓஓ…..ஓ….
திசையெங்கே திசையெங்கே
வழிகாட்டும் ஜீவனில்ல
ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல
ஆண் : பொறக்கும் கொழந்தைக்கெல்லாம்
பட்டு தொட்டில்தான்
எனக்கு தொட்டிலென்னமோ
குப்பத் தொட்டிதான்…..
ஆண் : அப்பன் யாரு அம்மா யாரு
நானும் பார்க்கல
கண்ணீரத்தான் கண்டேனம்மா
தாய்ப்பால் பார்க்கல….