பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு
ஆண் : இது யாரு செஞ்ச பாவமோ..
இல்ல யாரு தந்த சாபமோ
நீ ஒறவ நெனைச்சு உருகுன
நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்
ஆண் : நீ கனவ நெனைச்சு கலங்குன
நான் நெசமா இப்ப கதருறேன்
இது சோகம் இல்ல
அதுக்கு மேலதான்
ஆண் : ஓஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு
ஆண் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள
சொல்ல ஒரு வார்த்தையில்ல
பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள
கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல
ஆண் : சொந்தங்கள் எல்லாம்
சோகத்தில் மூழ்க
பந்தங்கள் எல்லாம்
பாசத்தில் ஏங்க
ஆண் : தாயின் மடியில்
இவ படுத்ததில்ல
தாயின் மொகத்த
இவ பார்த்ததில்ல
ஆண் : ஓ வயசே…. ஓ வயசே….
வாழமுடியாம தவிச்சிருச்சே
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்
ஆண் : வெட்டி வச்ச வாழ இலை
பந்தியில சேரவில்ல
கட்டிவச்ச கோட்டையில
வாசனைய கானவில்ல
ஆண் : கார்த்திகை மாசத்து
மாடத்து விளக்கு
காத்துல அனையிற
நெலையில கெடக்கு
ஆண் : காதல் எப்பொழுதும் பரமபதம்
பாம்பும் ஏணியும் மாறிவரும்
ஆண் : இவ மனசே இவ மனசே
சாகமுடியாம துடிச்சிருச்சே
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்
ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்