பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் காயத்ரி
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பெண் : கண்ணம்மா… கண்ணம்மா…
பதில் சொல்லம்மா…
பதில் சொல்லம்மா…
பெண் : என்னம்மா… என்னம்மா
பாசம் வச்சதே ஒரு குத்தமா
உன்னை எண்ணிப் பார்க்காமலே
விட்டுத்தந்தேனே
பெண் : என் காதலைதான் நானும்
இப்ப தத்துத் தந்தேனே
உன் கூரையில நானும்
வாழ ஆசைப்பட்டேனே
பெண் : ஒரு பாசத்துக்கு நானும்
இப்போ வாக்கப்பட்டேனே
என் காதல் ஒரு காத்தாடியாய்
துள்ளி வந்ததே
பெண் : அது பாசம் என்னும்
கம்பத்திலே மாட்டிக்கிட்டதே
நான் பட்டக்கடன் தீர்க்க
இப்ப நேரம் வந்ததே
பெண் : அந்த நேரத்தில நம்ம
காதல் தூரம் போனதே
யாரோடு சாபமோ
வாழாத வரைத்தான் நம்ம
ரெண்டு பேரின்
நெஞ்சைக் குத்திக் கொள்ளுதே ஓ….
ஆண் : கண்ணம்மா… கண்ணம்மா…
பதில் சொல்லம்மா…
பதில் சொல்லம்மா
ஆண் : குத்தம்மா குத்தம்மா
ஆசை வச்சதே ஒரு குத்தம்மா
ஒத்த வார்த்தைக் கேட்கும்போதே
சொத்துப்போனேன்னே
ஆண் : நான் ஓடி வந்து
நிக்கும்போதே சாம்பல் ஆனேன்னே
உன்னைப் பார்த்து
என்னென்னமோ கேக்க வந்தேனே
ஆண் : என் வார்த்தையெல்லாம்
தொலைஞ்சி இப்ப
ஊமை ஆனேன்னே
ஆண் : என் காதல் தேரும்
தேரடியை சேரவில்லையே
உன் காலடியில்
நொருங்கிப்போச்சு தேரவில்லையே
ஆண் : என் துக்கத்துக்கு
மருந்த எங்கு இருக்கு
அடி திக்கி திக்கி பேசும்
உந்தன் கண்ணில் இருக்கு
ஆண் : யார் செஞ்ச பாவமோ
பாம்பாக மாறிதான்
நம்ம ரெண்டு பேரு
கால சுத்தி கெடக்கு
ஓஒ ஓஒ…..ஓஒ..ஓஒ…