பாருக்குள்ளே நல்ல நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
நன்மையிலே உடல் வன்மையிலே
செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே
நன்மையிலே உடல் வன்மையிலே
செல்வ பன்மையிலே மறத்தன்மையிலே
பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில்
பொன்மயில் ஒற்றிடும் மாதர் தம் கற்பில்
புகழினிலே உயர் நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
வன்மையிலே உளத்தின்மையிலே
மனத்தன்மையிலே மதி நுண்மையிலே
வன்மையிலே உளத்தின்மையிலே
மனத்தன்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்கள்
உண்மையிலே தவறாத புலவர்கள்
உணர்வினிலே உயர் நாடு
பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
இந்த நாடு எங்கள் நாடு