நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று ஆய
கியாதி உடையாள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒழி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
இடங்கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இடங்கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இளகி, முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட
கொள்கை நலங்கொண்ட நாயகி,
நல்ல அரவின் படங்கொண்ட அல்குல் பணிமொழி
வேதப் பரிபுரையே!! வேதப் பரிபுரையே!!
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க!!