மந்தரையின் போதனையால்
மனம் மாறி கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்...
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள்
பஞ்ச பாண்டவரை பகைத்து அழிந்தார்...
சிந்தனையில் இதையெல்லாம்
சிறிதேனும் கொள்ளாமல் மனிதரெல்லாம்...
மந்த மதியால் அறிவு மயங்கி
மனம் போன படி நடக்கலாமோ...
ஓ... ஆ... ஆ...
ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே
உணர்வோடு ஒன்றியே உருவாகும் பாசமே
அணையாத தீபமாய் சுடர் என்றும் வீசுமே
நெஞ்சில் உண்டான அன்பையே
துண்டாடி வம்பையே உறவாக தந்திடும்
சிலர் சொல்லை நம்பியே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே
துணையின்றி வெண் புறா தனியாக வந்ததே
வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான்
அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே