பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : ஒரு போராளியின் பயணம் இது
அவன் போராடி பெற்ற பரிசு இது
ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
தாயின் மடியில் தவழ்ந்தவனே
நீ தரைக்குள் தூங்க போறியா
ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா..
ஆண் : இளைஞர்களை எழுப்ப வந்த
குட்டி சிங்கமே
இளம் சூரியனாய் ஒளி வீசிய
கட்டித் தங்கமே
கொலை வெறியர் ஜாதி பேத
தட்டி தூக்கினாரே
கொள்கைக்காக வாழ்ந்த உந்தன்
உயிரை போக்கினாரே
ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா
ஆண் : இயேசு புத்தர் நபிகள் காந்தி
காட்டும் வழியிலே
பேசும் புயல் பெரியார் அண்ணா
அம்பேத்கார் மொழியிலே
குன்றம் போல முழங்கி நடந்த
குலவிளக்கு நீயடா
உன் கொடி நிழலில்
என்றும் நாங்கள் கூடுவோம் பாரடா…..ஆ….
ஆண் : ஓய்வில்லாமல் உழைத்தவனே
நீ ஓய்வுக் கொள்ள போறியா