பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : ஒரே ரத்தம்தான் ஓடுது
உலகமெங்கும்தான்
ஒரே ரத்தம்தான் ஓடுது
உலகமெங்கும்தான்
ஆண் : நல்லவங்க கெட்டவங்க
நாலும் தெரிஞ்சவங்க
உள்ளவங்க வல்லவங்க
ஊருக்கு உழச்சவங்க
ஆண் : எல்லாருக்கும்தான்
ஓடுது ஒரே ரத்தம்தான்
ஒரே ரத்தம்தான் ஓடுது
உலகமெங்கும்தான்
ஆண் : சேத்துல பாடுபடும்
சின்னானுக்கு ஒரே ரத்தம்
திண்ணையில சாஞ்சு கெடக்கும்
சீமானுக்கும் ஒரே ரத்தம்
ஆண் : ஆத்துலே துணி வெளுக்கும்
அலமேலுக்கு ஒரே ரத்தம்
அத மாட்டிக்கிட்டு மினுக்குற
அலங்காரிக்கும் ஒரே ரத்தம்
ஆண் : ஒரே ரத்தம்தான் ஓடுது
உலகமெங்கும்தான்
ஆண் : வாளெடுத்து போராடும்
வீரனுக்கும் ஒரே ரத்தம்
கால் பிடிச்சு வாழுகிற
கோழைக்கும் தான் ஒரே ரத்தம்
ஆண் : ஆறடி நிலமுமில்லா
அடிமைக்கும் ஒரே ரத்தம்
ஊருக்குள்ளே நூறு வேலி
உள்ளவர்க்கும் ஒரே ரத்தம்
ஆண் : ஒரே ரத்தம்தான் ஓடுது
உலகமெங்கும்தான்
ஆண் : சேரியிலே செருப்பு தைக்கும்
மாரிக்கும்தான் ஒரே ரத்தம்
ஏரியிலே மீன் பிடிக்கும்
இருளனுக்கும் ஒரே ரத்தம்
உழைக்கிற தோழனுக்கும்
உறிஞ்சி வாழும் துரைகளுக்கும்
ஒரே ரத்தம் ஒரே ரத்தம் ஒரே ரத்தம்…..